தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்!

indian meteriological red alert - 2026

புது தில்லி: கஜா புயல் உருவானதைத் தொடர்ந்து நவ.15 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப் பட்டுள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர ஆந்திரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் ஞாயிறு காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக வங்கக் கடல் பகுதியில் கஜா புயல் உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா நோக்கி நகரக் கூடும். பின்னர் வலுவிழந்து தென் தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு அருகே நவ.15 ஆம் தேதி கரையைக் கடக்கும்.

இதன் காரணமாக நவ.14 ஆம் தேதி, தமிழகம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவில் கன மழையும், நவ.15 ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிக கனத்த மழை முதல் கனத்த மழை பெய்யக்கூடும்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

நவ15 ஆம் தேதியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம். நவம்பர் 16 முதல் 18 வரை தமிழகம், கேரளா, ஆந்திர கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்,

தெற்கு கர்நாடகா, ராயலசீமா, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது…. என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

இருப்பினும், இது குறித்து விளக்கம் அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தமிழகத்துக்கு விடுக்கப் பட்ட ரெட் அலர்ட் என்பது நிர்வாக ரீதியிலானது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories