சிறுமியை சீரழித்த பாதிரி ராபின் வடக்கன்சேரிக்கு 20 ஆண்டு சிறை!

Published:

Robin Vadakkanchery - 2026

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் ராபின் வடக்கன்சேரிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் தப்பிப்பதற்காக, சிறுமியின் தந்தையின் மீது பழியைத் திருப்பியுள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! சிறுமியின் தந்தையும் பிறழ் சாட்சி ஆகிவிட்டார் ! சிறுமி பிரசவித்த மருத்துவமனை, சர்ச் நடத்தும் கிறிஸ்து ராஜா  மருத்துவமனை! இதற்கு, திருவிதாங்கூர் பகுதியில் உள்ள ஒரு விமர்சனத்தைச் சொல்லி கருத்திடுகின்றன சமூக ஊடகங்களில்!  ஒரு கிறிஸ்தவ மிஷனரி செட்டப் எப்படி இருக்கும்? சர்ச் நன்னரி (கன்னியாஸ்திரிகள் மையம்) ஆர்பனேஜ் (அனாதை இல்லம்) என்பதாக கருத்திடுகின்றனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கொட்டியூர் செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கன்சேரி. இவர் அங்குள்ள பள்ளியில் மேலாளராகவும் இருந்தார்.

பள்ளியில் பிளஸ் 1 படித்த மாணவியை கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் ராபின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் மாணவி கருவுற்றாள். இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், மாணவிக்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் ராபின் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன் பின்னர் தலச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். மாணவியின் பிறப்புச் சான்றிதழ் மூலம் அவர் மைனர் என்பதையும், டிஎன்ஏ சோதனை மூலம் குழந்தைக்கு ராபின்தான் தந்தை என்பதையும் போலீஸார் நிரூபித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் தலச்சேரி போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பி.என்.வினோத் நேற்று தீர்ப்பளித்தார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அதில், ராபினுக்கு 3 வழக்குகளிலும் தனித்தனியாக 20 என மொத்தம் 60 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் ரூ.1.5 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். பலாத்கார வழக்கில் ராபினுக்கு 60 ஆண்டு சிறை தண்டனை என்று விதிக்கப்பட்டாலும், தண்டனையை ஒரே காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். எனவே 20 வருட சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்!

Related articles

Recent articles

spot_img