தன் விவசாய நிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் இறங்க தளம்… நெஞ்சடைத்த விவசாயி தற்கொலை!

Published:

chandrababu naidu - 2026

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் இறங்க தனது விவசாய நிலத்தில் தளம் அமைக்கப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குண்டூரின் கொண்டவீடு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க முதல்வர்
சந்திரபாபு நாயுடு சென்றார். இதற்காக குண்டூரில் உள்ள கொண்டவீடு கிராமத்தில்  கோட்டேஸ்வர ராவ் என்ற கோட்டய்யா விவசாயிக்கு சொந்தமான நிலத்தில், அவரது
அனுமதி இன்றி தற்காலிக இறங்குதளம் அமைக்கப்பட்டது.

ஆனால் தன் நிலத்தில் ஹெலிகாப்டர் இயங்கு தளம் அமைக்க அவர் எதிர்ப்பு
தெரிவித்த போதும் அதிகாரிகள் அவரை அடக்கி வைத்து, அங்கே இறங்குதளம் அமைத்தனர்.

இதனைக் கண்ட அவர், நெஞ்சடைத்து விக்கித்துப் போனார். மனம் நொந்த அவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம், ஆந்திர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

விவசாயி தற்கொலைக்குக் காரணமான அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை
எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பியுள்ளன. இதனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img