மக்களவை தேர்தல் 2019 : முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்

elections - 2026

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்னும் 3 தினங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

17-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 11-ம் தேதி வெளியிட்டது. அதன்படி முதற்கட்ட தேர்தல் ஆந்திரப்பிரதேசம் (25), அருணாச்சலப்பிரதேசம் (2), அசாம் (5), பீஹார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு  மற்றும் காஷ்மீர் (2), மஹாராஷ்ட்ரா (7), மணிப்பூர் (1), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1) ஒடிஷா (4), சிக்கிம் (1) , தெலங்கானா (17), திரிபுரா (1), உத்தரப்பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5) , மேற்கு வங்கம் (2) , அந்தமான் (1), லட்சத்தீவு (1)   உள்ளிட்ட 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது . மேலும் இதற்கான பிரச்சாரம் நாளை (09/04/2019) மாலை 5.00 மணியுடன் முடிவடைகிறது . இந்தியா முழுவதும் பதிவான வாக்குகள் மே – 23 தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியீடுகிறது தேர்தல் ஆணையம்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

இதனையொட்டி அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.

முதற்கட்ட தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெற்றாலும் தபால் வாக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள மலை கிராமமான லோகித்பூரில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தங்களது ஜனநாயக கடமையை வாக்குச்சீட்டு முறையில் கடந்த சனிக்கிழமையன்று செலுத்தினர்.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு, தேர்தல் தொடர்பான பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி கிடையாது. மேலும், கைபேசி எஸ்.எம்.எஸ்., பேஸ்புக், டுவிட்டர், டி.வி., ரேடியோ, எப்.எம். போன்ற எலக்ட்ரானிக் பிரசாரங்களுக்கும் இன்று மாலை 6 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories