நவீன் பட்நாயக்கை புகழ்ந்ததால்… எம்.எல்.ஏ.,க்கள் வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப் பட்ட ‘ஆம்ஆத்மி’!

Published:

alka lamba twitter - 2026ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா அக்கட்சியின் எம்.எல்.ஏக்களின் வாட்ஸ் அப் குழுவில் இருந்து மீண்டும் நீக்கப் பட்டுள்ளார்.

அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்து வரும் நிலையில், அவர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து சனிக்கிழமை நேற்று மீண்டும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கி வருபவர் அல்கா லம்பா. தில்லி சாந்தினி சௌக் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் இவருக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அல்கா லம்பா வலியுறுத்தினார். ஆனால் அவ்வாறு கூட்டணி அமையவில்லை. இதனால் ஆம் ஆத்மி தில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதை அல்கா லம்பா விமர்சித்தார். இந்நிலையில், அவர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

alka lamba - 2026இதை அடுத்து, தாம் வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப் பட்ட ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்து, அதனை வெளியில் பகிர்ந்துள்ளார் அல்கா லம்பா. மேலும், ஆம் ஆத்மியில் எனது பயணம் 2020 ஆம் ஆண்டு இறுதியுடன் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராகவும் இப்போது திரும்பியுள்ளார் அல்கா லம்பா.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

முன்னதாக, தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வாட்ஸ் அப் குழுவில், ஒடிஸாவின் முதல்வராக ஐந்தாவது முறையாக தேர்வான நவீன் பட்நாயக் குறித்து பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார் அல்கா லம்பா. இதை அடுத்து, வடகிழக்கு தில்லி ஆம் ஆத்மி வேட்பாளர் திலீப் பாண்டே அந்தக் குழுவில் இருந்து அல்காவை நீக்கியுள்ளார்.

இந்த ஸ்கிரீன்ஷாட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அல்கா லம்பா.

இன்னொரு மாநில முதல்வரின் செயல்பாட்டை பாராட்டி எம்.எல்.ஏக்கள் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்ததற்காக ஒரு எம்.எல்.ஏ.,வை நீக்கும் அளவுக்கு கருத்துச் சுதந்திரமும், சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளது என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img