மனைவி கண்முன்னே கணவன் மற்றும் சகோதரிகள் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம்…..!

இந்தியா கிரைம் நியூஸ்

water deth 2 - 2026
தெலங்கானா மாநிலம், ஜனகம்மா மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் லஷ்மன் நாயக்கின் மகன் அவினஷ்க்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. .

இந்நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வந்த அவினாஷ் தனது மனைவியுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சொந்த ஊரான ஜனகம்மாவிற்கு சென்றுள்ளார்.

இதனையொட்டி அவினாஷ், அவரது மனைவி, மனைவியின் தங்கைகள் சங்கீதா மற்றும் சுமலதா ஆகியோர் நர்மதா மண்டலம் பொம்மக்கூறு அணை கால்வாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது, திவ்யா கால்வாய் கரையோரத்தில் நின்றபடி கணவன், மற்றும் சகோதரிகள் குளிப்பதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவினாஷ், திவ்யாவின் தங்கைகள் சங்கீதா, சுமலதா இருவரும் நீரில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த மூன்று பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி கண்முன்னே கணவன், இரு சகோதரிகள் நீரில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.