பெண்களுக்கான பிரத்யேக ரயில் பெட்டி..! பிங்க் கலரில் மிளிர்கிறது! அசத்தும் ரயில்வே!

Published:

nfrrailway - 2026

பெண்களுக்கான சிறப்பு கோச்களாக, பிங்க் வண்ணத்தில் தனித்துத் தெரியும் வகையில் ரயில் பெட்டிகளை ரயில்வே துறை அறிமுகப் படுத்தியிருக்கிறது. இதன் முதல் கட்டமாக வடகிழக்கு ஃப்ராண்டியர் ரயில்வேயில் ஆறு பாசஞ்சர் ரயில்களில் இந்தப் பெட்டிகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.

மெட்ரோ ரயில்களில், ஒவ்வொரு ரயிலிலும் பெண்களுக்கு என சிறப்பு அடையாளத்துடன் ஓரிரு பெட்டிகள் ஒதுக்கப் படுகின்றன. இந்தப் பெட்டிகளில் பெண்களும் குழந்தைகளும் பயணிக்கலாம். பெண்கள் பெட்டிகளுடன் முதல்வகுப்புக்கென சில இருக்கைகளும் மின்சார ரயில்களில் ஒதுக்கப் பட்டிருக்கின்றன. இந்த வரிசையில், மற்ற ரயில்களிலும் பெண்களுக்கென ஒரு பெட்டியை ஒதுக்கப்போவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தற்போது வடகிழக்கு ஃப்ராண்டியர் ரயில்வே இந்த முறையினை செயல்படுத்தியுள்ளது. அந்த ரயில்வேயின் கீழ் இயக்கும் ஆறு பாசஞ்சர் ரயில்களில் ஒரு பெட்டி பெண்களுக்கான பிரத்யேக பிங்க் கலர் பெட்டியாக மாற்றப் பட்டுள்ளது.

pink coaches - 2026இந்தப் பெட்டிகளை அடையாளப்படுத்த ஜன்னல் பகுதி பிங்க் நிறத்தில் இருக்கும். இவ்வாறு பிங்க் நிறம் பூசிய ஆறு பாசஞ்சர் ரயில்கள் 55817 / 55818, 55803 / 55804 மற்றும் 55809 / 55810 எண்கள் கொண்ட ரயில்கள் ஒரு வழித் தடத்திலும் 55817 / 55818, 55803 / 55804 மற்றும் 55809 / 55810 ஆகிய எண்கள் ரயில்கள் மற்றொரு வழித்தடத்திலும் பெண்களுக்கான பிரத்யேக பிங்க் வண்ணத்துடன் இயங்குகின்றன.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், விரைவில் வடகிழக்கு ஃப்ராண்டியர் ரயில்வேயில் உள்ளது போல பிங்க் நிறப் பெட்டிகள் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பிங்க் நிற பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுவது பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க உதவியாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img