பழைய வீடியோக்களைப் பகிர்ந்து பொய்த் தகவல்களால் பதற்றம் ஏற்படுத்த முயலும் பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானுக்கு இப்போது இருக்கும் ஒரே ஆதரவு டிவிட்டர் சமூகத் தளம்தான்! பாகிஸ்தானைச் சேர்ந்த செயல் அதிகாரியின் கட்டுப் பாட்டில் இருப்பதால், டிவிட்டரில் பொய்களைப் பரப்புவதில் புகுந்து விளையாடி வருகின்றனர் பாகிஸ்தானியர்கள்.

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் காஷ்மீரில் காவல்துறை அட்டூழியம் என்று கூறி பழைய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதற்கு ஜம்மு காஷ்மீர் போலீஸார் விளக்கம் கேட்டுள்ளனர்.

காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளித்துவந்த 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்தது குறித்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பாகிஸ்தான், இதற்காக சர்வதேச கவனத்தை ஈர்க்க முயன்றது. ஆனால், சர்வதேச சமூகம் இதனை ஒதுக்கித் தள்ளியதால், இப்போது பாகிஸ்தானின் முக்கியப் பிரமுகர்கள் உள்பட ஐ.எஸ்.ஐ., ஏஜெண்டுகள் தாங்களே களத்தில் இறங்கி பொய்களைப் பரப்பி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு இப்போது இருக்கும் ஒரே ஆதரவு டிவிட்டர் சமூகத் தளம்தான்! பாகிஸ்தானைச் சேர்ந்த செயல் அதிகாரியின் கட்டுப் பாட்டில் இருப்பதால், டிவிட்டரில் பொய்களைப் பரப்புவதில் புகுந்து விளையாடி வருகின்றனர் பாகிஸ்தானியர்கள்.

காஷ்மீர் குறித்த பொய்களைப் பரப்பி வரும் பாகிஸ்தானியரில் அதன் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கும் ஒருவர். அவர், இந்தியப்படைகள் காஷ்மீர் மீது அட்டூழியங்களை நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டு ஒரு போலி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

மாலிக் தனது பதிவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை காஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமையை நசுக்கும் விதமாக செயல்படும் இந்திய ஆயுதப்படைகளின் அட்டூழியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள கிராமங்களைத் தாக்க இந்தியப் படைகள் துப்பாக்கிகளுடான ஹெலிகாப்டர்களை பயன்படுத்தின என்று மாலிக் கூறியுள்ளார்.

மாநிலத்தில் முழுமையான கட்டுப்பாடு இருந்தபோதிலும், காஷ்மீரிகள் இந்திய கொடூரத்தின் வீடியோக்களை தங்களுக்கு அனுப்பி வருவதாக மாலிக் தெரிவித்துள்ளார் அவரது இந்த வீடியோவை பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும் பகிர்ந்து கொண்டு, அவரது இதே கோரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையோ, பாகிஸ்தானும் அதன் தலைவர்களும் செய்து வரும் கலப்புப் போரை அறிந்து, மாலிக் கூறிய குற்றச்சாட்டுகளை உடனடியாக மறுத்துள்ளது.

மாலிக் வெளியிட்டுள்ள வீடியோவை “தீய உள்நோக்கம் கொண்டது என்று கூறும் காவல்துறையினர், தவறான வீடியோ அகற்றுவதற்காக ட்விட்டர் நிறுவனத்துக்கு புகார் அளித்துள்ளனர். இவை பழைய ஷெல் வெடிப்பின் வீடியோ, அதை புதிதாக ஏற்பட்டது போல் பகிர்ந்துள்ளார் மாலிக் என்று புகார் கூறியுள்ளனர்.

கடந்த 2018 அக்டோபரில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காமில் வெடிகுண்டு இருந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. அப்போது வீடு தீப்பற்றியது. இந்த நேரத்தில், பாதுகாப்புப் படையினர் அந்த வீடு அருகே பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து, அவர்களை தடுத்துள்ளனர். ஆனால், அதையும் மீறி அந்த வீட்டின் அருகே சென்ற போது, வீடு தீப்பற்றிய இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஆறு பொதுமக்கள் உயிர் இழந்தனர்! இது குறித்து யூடியூபில் அப்போது இதே வீடியோ பகிரப் பட்டது. இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் டிவிட்டர் பதிவில் தகவல் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் பாகிஸ்தானியர்கள், இது மோடி அரசால் கடந்த வாரம் நிகழ்த்தப் பட்ட அக்கிரமம் என்று சொல்லி டிவிட்டர் பதிவுகளில் கூறி வருகின்றனர்.

நேற்றும் கூட, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் இயல்புநிலையை ஜீரணிக்க முடியாத ஒரு பாகிஸ்தான் ஊடகவியலாளர் போலி செய்திகளைப் பரப்பி, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையைத் தூண்ட முயற்சி செய்தார்.

கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஊரடங்கு அமலின் போதான அனுமதிச் சீட்டு இல்லாத காரணத்தால் அவரை மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்க வில்லை என்றும், அதனால் கோபப்பட்ட ஒரு முஸ்லீம் காஷ்மீரி போலீஸ்காரர், 5 சிஆர்பிஎஃப் வீரர்களைக் கொன்றார் என்றும், இதனால் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினருக்கும், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் வாஜ் கான் ட்வீட் செய்திருந்தார், ஆனால், சிஆர்பிஎஃப் மற்றும் காஷ்மீர் காவல்துறை இரு தரப்பும், பாகிஸ்தான் பத்திரிகையாளரின் பொய்களைத் தோலுரித்துக் காட்டியது.

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் போது, புதிய யதார்த்த உலகுக்கு மாநிலம் படிப்படியாக மாறி வருகிறது. எப்படி இருந்தாலும், பாகிஸ்தானின் இது போன்ற கற்பனைகள், காஷ்மீரின் யதார்த்த நிலவரத்துக்கு முற்றிலும் மாறானது. இதனை பாகிஸ்தானியர்கள் செய்து கொண்டிருப்பது, அவர்களின் மத ரீதியிலான வழக்கமான இந்திய விரோத மனப்பான்மை.

ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் சினிமாத் துறையினரும் செய்வது பச்சை தேசத் துரோகம்! கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! இவர்கள் இந்த மண்ணில் விளைந்ததை உண்டு, இந்த நாட்டில் வாழும் தகுதியை இழந்துவிட்டவர்கள்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...