தமிழகத்தில் பகுதியாகத் தெரிந்த சூரிய கிரகணம்!

சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
solar eclipse - 2026

அரிய வானியல் நிகழ்வான சூரிய கிரகணம் இன்று தமிழகத்திலும் தெரிந்தது.

தமிழகத்தில் பரவலாக சூரிய கிரகணத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர். தமிழகத்தில் பல இடங்களில் பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. ஆனால், உதகையில் முழு சூரிய கிரகணம் 9.26 முதல் தெரிந்தது.

தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம் தென்பட்டது. சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, திடீரென இருள் சூழ்ந்தது.

திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் சூரிய கிரகணத்தை பொதுமக்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. முன்னதாக, அரிய வானியல் நிகழ்வான சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் ஏற்பாடுகள் செய்ய பட்டிருந்ததால், அங்கே பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்தனர். ஆனால் மேக மூட்டத்தால் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.

சூரிய கிரகணம் என்பது, பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே சந்திரன் கடக்கும் நிகழ்வு. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று காலை 7.59 மணி துவங்கி 11.19 மணி வரை நீடிக்கிறது.

தமிழகம், கர்நாடகா, கேரளா, டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பகுதி சூரிய கிரகணம் தெரிந்தது. இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.