தமிழகத்தில் இன்று 4,979 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Published:

corona virus
corona virus

தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அதே நேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

19-07-2020 கொரோனா விவரம்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 1,70,693ஆக உயர்வு கண்டுள்ளது.

இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 4,059ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,17,915ஆக உயர்ந்துள்ளது.

இது வரை உயிரிழப்பு எண்ணிக்கை 2,481ஆக உயர்ந்து உள்ளது. மேலும், இன்று மட்டும் ஒரே நாளில் 78பேர் உயிரிழந்து உள்ளனர். சென்னையில் மட்டும் 85,859பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தமிழக சுகாதார துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

சென்னையில் பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில், குறிப்பாக, தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்றைய பாதிப்பு: மாவட்ட வாரியாக….

district-wise-corona-details-july-19
district-wise-corona-details-july-19

Related articles

Recent articles

spot_img