அமித் ஷா தமிழக வருகை திடீரென ஒத்திவைப்பு

சற்றுமுன் சென்னை

amit shah - 2026

அமித் ஷா வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் வருகை தரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகத்துக்கு வருவதாக இருந்தது. இதை ஒட்டி சென்னை நகரில் அவரை வரவேற்று பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இன்று அவர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்நிலையில், தில்லியில் இன்று பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதால், அவரது தமிழக வருகை ஒத்திவைக்கப் பட்டதாகவும், அவர் தமிழகம் வரும் தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்றும் கட்சி அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது.

இதனிடையே, இன்று அதிமுக இரு அணிகள் இணைப்பு நடைபெறுகிறது. இன்று மதியம் 12 மணி அளவில், அதிமுக கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கவுள்ளார். பின்னர் மாலை இணைப்பு குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டது.

மேலும், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தனது மும்பை நிகழ்ச்சிகளை அவசரம் அவசரமாக ரத்து செய்துவிட்டு தமிழகம் திரும்புகிறார்.

இந்த இரு நிகழ்வுகளுக்கும் அமித் ஷாவின் வருகைக்கும் தொடர்பு இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென அவரது தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.