பேருந்து சேவை: ஆகஸ்ட் 1 முதல் தொடக்கமா?

சற்றுமுன் தமிழகம்
bus operation
bus operation

சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருக்கும் இடங்களைத் தவிர பிற பகுதிகளில் அரசு பேருந்து சேவை 50 சதவீத இருக்கைகளுடன் மண்டலங்களுக்குள் மட்டும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து மண்டலங்களுக்குள் மட்டும் விடப்பட்டது. ஆனால் மூன்று வாரங்களில் தொற்று அதிகரித்ததால் சேவை நிறுத்தப்பட்டது.

எனவே மீண்டும் பல்வேறு நிறுவனங்களுக்கு செல்பவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மற்ற மாநிலங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவை தற்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.