கொரோனா: 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள்: ராதாகிருஷ்ணன் தகவல்!

Published:

radhakrishnan-madurai-visit
radhakrishnan-madurai-visit

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எடுத்த 24 மணி நேரத்தில் முடிவுகள் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேரம் ஆகிறது என தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மதுரை தேனி மெயின் ரோடு, திருமலை காலனி பகுதியில் நடைபெறும் கொரோனா அறிகுறி, காய்ச்சல் கண்டறியும் முகாமினை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.

radhakrishnan-madurai-visit1
radhakrishnan-madurai-visit1

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர்.ராதகிருஷ்ணன், தமிழகத்தில் 6 வராமாக சராசரி குறைந்து வருகிறது. தொடர்ந்து கண்கணிப்பு தீவிர படுத்தபட்டுள்ளனர். மதுரையில் தற்போது தொற்று பரவுவது சராசரி குறைந்துள்ளது.

மதுரையில் 300க்கு மேற்பட்ட மருத்துவ முகாம் நடத்தபட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று கட்டுப் படுத்தபட்டதால் அலட்சியமாக இருக்கக் கூடாது. மதுரையில் நேரடி தொற்று ஏற்பட்டு இறப்பவர் எண்ணிக்கை குறைவு. வேறு தொற்றுடன் கொரோனா தொற்று வருபவர்கள் மட்டும்தான் உயிரிழக்கிறார்கள்.

radhakrishnan-madurai-visit2
radhakrishnan-madurai-visit2

தமிழகத்தில் சராசரியாக அனைத்து மாவட்டங்களில் 10மடங்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எடுத்த 24 மணி நேரத்தில் அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேரம் ஆகிறது என்றார் ராதாகிருஷ்ணன்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

Related articles

Recent articles

spot_img