வீட்டை எழுதி தர கேட்ட அண்ணன்! மறுத்த தங்கையை குத்திக் கொல்ல முயற்சி!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
knife

கிருஷ்ணகிரி அடுத்த பெரிய குந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமி, (50). கணவரை இழந்த இவர், அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். குழந்தைகள் இல்லை.

இவர் குடியிருக்கும் வீட்டை, தனக்கு எழுதித்தர இவரது அண்ணன் கோவிந்தன், (55), நீண்ட நாட்களாக கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு மீண்டும் வீட்டை தன் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த கோவிந்தன், தன் தங்கையின் கை விரல்கள் மற்றும் முதுகில் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த லட்சுமி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது புகாரின்படி, குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் ரஜினி, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கோவிந்தனை தேடி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.