ஹோட்டலில் பாலியல் தொழில்.. மூவர் கைது! நடுவில் மாட்டிக் கொண்ட காதல் ஜோடி!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
nagarkovil

நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விபசாரம் நடைபெறுவதாக ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையொட்டி, போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது ஒரு பெண் உட்பட மூன்று பேர் காணப்பட்டனர்.

கைதான பெருவிளை பகுதியை சேர்ந்த கண்ணன் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம்பெண்களை அழைத்து வந்து அந்த விடுதியில் தங்க வைத்து இளைஞர்களை அழைத்து வந்து பெண்களை பயன்படுத்தி விபச்சார தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும், விடுதியில் தங்கியிருந்த மங்கலக்குன்று பகுதியை சேர்ந்த சுபினையும் கைது செய்த போலீசார், விடுதியின் உரிமையாளர் லாரன்ஸ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும், அந்த விடுதியில் போலீசார் சோதனையிட்டபோது ஒரு அறையில் காதல் ஜோடி கொண்டு தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரையும் விசாரித்த போலீசாரிடம், தங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என இளம்பெண் மிரட்டியதால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

கொரோனா தொற்று தடுப்பு காரணமாக விடுதிகளை மூட உத்தரவிட்டதோடு, முன்னெச்சரிக்கை பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நாகர்கோவில் வட்டாரத்தில் விபச்சார தொழில் கொடிகட்டி பறப்பது தெரிய வந்துள்ளது.

இரு மாதங்களில் 3 பகுதிகளில் விபச்சாரம் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.