ஆண்டவனை தரிசிக்க அடையாள அட்டையுடன் வரவும்: கோவில் நிர்வாகம்!

kovil

இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய உடை அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்து 120 கோயில்கள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் செப்.1 முதல்தமிழகம் முழுவதும் அனைத்துகோயில்களும் திறக்கப்பட்டன. வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் உள்ளிட்டகோயில்களின் இணையதளத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பக்தர்கள் ஆதார் அட்டை விவரத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு தரிசன நாள், நேரம் குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுதவிர, இணையதளத்தில் பதிவுசெய்யாமல் நேரில் வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனை பெற்றும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இணையதளத்தில் பதிவு செய்யும்போது ஆதார் அட்டை விவரத்தை கட்டாயம் அளிக்க வேண்டும். தரிசனத்துக்கு வரும்போது அடையாள அட்டையை நேரில் எடுத்து வர வேண்டும். ஆண்கள் சட்டை அல்லது குர்தா, வேட்டி, பேன்ட், பெண்கள் புடவை, பாவாடை தாவணி, சுடிதார் உள்ளிட்டவை அணிந்து வர வேண்டும். பதிவு செய்த நேரத்தைத் தாண்டி வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், 65 வயதுக்குமேற்பட்ட முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முன்பதிவு செய்யும்போதே பக்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories