கண் தான விழிப்புணர்வு பேரணி! கரூரில் ல்யன்ஸ் லியோ சங்கம் சார்பில் நடைபெற்றது! கருர் லயன்ஸ் சங்கங்கள் மண்டலத் தலைவர் மேலை பழநியப்பன் கீழ் உள்ள 12 சங்கங்கள் அரசு கலைக் கல்லூரி லியோ சங்கம் இனைந்து கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தின 10-9-2018 இன்று மாலை நாரதகான சபா முன்பு மாவட்டத் தலைவர் பார்வைக் கோர் பயணம் ஏ.ஆர்.கே.சேது சுப்பிரமணியன் தலைமையில் சுமங்கலி செல்வராஜ் வட்டாரத் தலைவர்கள் சி பகுமார் செந்தில்குமார், சண்முகம், பிளாட்டினம் கணேசன்.பி. கார்த்திகேயன் , பி.என்.அனந்தநாராயணன், ஜுடாஸ்மேரி முன்னிலையில் 200க்கு மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி லியோ மாணவ மாணவிகள் செய்வோம்!செய்வோம்!கண் தானம் செய்வோம்! எடுத்துச் செல்வது எதுவும் இல்லை கொடுத்துச் செல்வோம் கண்களை என முழக்கமிட்டு விழிப்புணர்வு பதாகை ஆட்டோ முன்செல்ல பேண்ட் வாத்ய இசையுடன் மண்டலத் தலைவர் மேலை பழநியப்பன் கண் தான விளக்க உரை ஆற்றிட தலைமை தபால் நிலையம் வழி நகரத்தார் மண்டபம் சென்றடைந்தனர் மெஜஸ்டிக், ஹேண்ட் லூம்.பிளாட்டினம், வாங்கல், தான் தோன்றி மலை காந்திகிராமம் பள்ளபட்டி, புகழூர் , அரவக்குறிச்சி லயன்ஸ் சங்கங்கள் பங்கேற்றன
Popular Categories




