ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை: உறவினர் தகவல்

Published:

பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று, ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்று கூறி வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற மஞ்சுளா. 1980ல் பிறந்த அந்தப் பெண், இதனை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே, ஜெயலலிதாவின் அத்தை மகள் உறவின் முறையான லலிதா என்ற பெண்மணி, பெங்களூரில் செய்தியாளர்கள் சிலரிடம் இது குறித்துப் பேசினார். அப்போது, ஜெயலலிதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மை. ஜெயலலிதாவின் தாய் இறந்து விட்டதால், என் பெரியம்மா ஜெயலட்சுமிதான் பிரசவம் பார்த்தார். தனக்குக் குழந்தை பிறந்தது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக் கொண்டார். இந்தக் குழந்தை அம்ருதாதான் என்று என்னால் உறுதியாகக் கூற இயலாது. மரபணுச் சோதனையில் தான் உறுதிப்படுத்த முடியும். என் தாயார் ஜெய்சிகாவின் அண்ணன் ஜெயராமின் மகள்தான் ஜெயலலிதா என்று கூறினார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

amrutha - 2026

முன்னதாக, இது குறித்து எம்.ஜி.ஆர்., விசுவாசியும் இதயக்கனி இதழை நடத்திக் கொண்டு வருபவருமான இதயக்கனி விஜயன் தன் சமூக ஊடகப் பதிவில் இவ்வாறு கூறியிருக்கிறார்…

ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள் ?

‘ஜெயலலிதாவுக்கு ஓரு மகள் உண்டு.
அமெரிக்காவில் இருக்கின்றார்’ என்று நக்கீரன் போன்ற பத்திரிகைகள் இருபது வருடங்களாக கதை விட்டுக்கொண்டிருக்கின்றன.

எம். ஜி. ஆர். அமைச்சரவையில்
இருந்த ஒரு மந்திரியே என்னிடம் ஒரு சிறுமியின் படத்தைக்காட்டி
‘இது ஜெயலலிதாவின் மகள். அமெரிக்காவில் இருக்கிறாள்’ என்றார்.

‘இதைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்துவோம்’ என்றதோடு சரி.

கடந்த டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த சமயத்தில் ‘ஜெயலலிதா மகள்’ என்று ஓரு மலையாளப்பெண்ணின் படத்தை ஊடகங்கள் வெளியிட்டு குழப்பம் உண்டாக்கின.

இது ஒருபுறம் இருக்கட்டும். எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் முத்தண்ணனின் அனுபவங்களை ‘தினமலர்’ வாரமலரில் ‘எம்.ஜி.ஆர். நினைவுகள்’ என்ற பெயரில் தொடராக எழுதிய போது ஜெ. மகள்
பற்றிய விபரம் கேட்டேன்.

” அதில் உண்மையில்லை. அது பற்றி விசாரித்து தெரிந்த்து கொண்டோம்.
தலைவர் எம். ஜி. ஆருக்கும் இந்த உண்மைகள் தெரியும்” என்றார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

ஜெயலலிதா ஒரு தைரியமான
பெண்மணி. அவருக்கு ஓரு குழந்தை
இருந்திருந்தால் அதை ஒப்புக்கொள்ளும் தைரியம் இல்லாமலா போகும் ?
– இதயக்கனி விஜயன்

***
இதனிடையே, இந்த விவகாரம், தற்போது ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Related articles

Recent articles

spot_img