தி.தி.தேவஸ்தான ஊழலை கண்டு கொண்ட ஏழுமலையான்: நன்றி தெரிவித்து 101 சிதறுகாய்

சற்றுமுன் புகார் பெட்டி

ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் முதன்மை அதிகாரி மீதான ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் கண்காணிப்பு துறை குழுவினை அமைத்து புகார் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தார்.

பின்னர் அதிகாரி திரு நரசிம்ம ராவ் மீதான புகார் ஊர்ஜிதமானதை தொடர்ந்து பணி நீக்க உத்தரவு பிறப்பித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனாலுக்கான முதன்மை அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று தேவஸ்தான வலை தளத்தில் விண்ணப்ப படிவத்தை வெளியிட்டார்.

ஊழல் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதும் உரிய அதிகாரி மற்றும் அவருக்கு உறுதுணை நின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில் முதன்மை அதிகா்ரி திரு நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டிய ராயலசீமா போராட்ட சமிதி தலைவர் தமது குழுவுடன் திருப்பதி அலிபிரி பாதாலு மண்டபத்திற்கு சென்று அங்கு தமது போராட்டத்திற்கு ஏழுமலையான் நியாயம் வழங்கியத்திற்கு நன்றி தெரிவிக்கும்வகையில் 101 தேங்காய்களை உடைத்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.