pm modi philip kotler award - 2026

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பிலிப் கோட்லெர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கப் பல்கலையின் தனித்துவ விருதான பிலிப் கோட்லர் விருது வழங்கப்பட்டுள்ளது

திங்கள்கிழமை புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருதினை மோடிக்கு பல்கலையின் சார்பில் வழங்கப் பட்டுள்ளது. இது மோடியின் நாட்டுக்கான தன்னலமற்ற அர்ப்பணிப்பு மனோபாவ சேவைக்காகவும் அவரது எதிர்கால கனவு கொண்ட தலைமைக்காகவும் வழங்கப்படுவதாக விருது அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த விருதின் அடிப்பாகத்தில் மூன்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ”people, profit and planet” என்று இருக்கும்! இதுகுறித்து தகவல் வெளியிட்ட பிரதமரின் அலுவலகம் இது சிறப்பான தலைவர்களுக்கு வருடம் தோறும் வழங்கப் படும் விருது என்று கூறப் பட்டுள்ளது. பிலிப் கோட்லர் என்பவர் அமெரிக்காவின் ஸ்கூல் ஆப் கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக சந்தையியல் பேராசிரியர். அவரது பெயரில் இந்த விருது வழங்கப் படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் மோடியின் இந்திய நாட்டுக்கான தன்னலமற்ற சேவைக்காக அயராத அவரது உழைப்புக்காகவும், அதன் மூலம் பொருளாதாரத்தில் மிகப் பெரும் வளர்ச்சியை நாடு அடைந்துள்ளதாகவும் நாட்டின் சமூக பொருளாதார தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஈடுபட்டதாகவும் இந்த விருது வழங்கப்படுவதாக அமைப்பு கூறியுள்ளது!

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இந்த விருதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கண்டுபிடிப்பாளர்களின் மையமாகவும் மேக் இன் இந்தியா திட்டத்தின் படி உற்பத்தியாளர்களின் செயல் திறன் கொண்டதாகவும் சர்வதேச தொழில்நுட்ப பொருளாதார கணக்காளர்களின் சர்வதேச மையமாக திகழ்வதாகவும் கூறப்பட்டுள்ளது

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்கால திட்டமிடலுக்கான தலைமைப் பொறுப்பை சிறப்பாக ஆற்றியதற்காகவும் பொருளாதாரரீதியில் பின்தங்கியவர்களுக்கு சிறப்பான வகையில் திட்டங்களை பெறுவதற்கு வழிகோலியதற்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது

இந்த விருதின் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இந்தியா ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்வச்ச பாரத் ஆகியவை இடம்பெற்றுள்ளன! இவை நாட்டின் வளர்ச்சியில் மிகப் பெரும் பங்காற்றும் என்றும் சர்வதேச உற்பத்தியாளர்கள் முதலீட்டாளர்களின் கவனம் பெறும் மையமாகவும் இந்தியா திகழ்கிறது என்றும் கூறியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending