கூடுவாஞ்சேரியில் அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

Published:

கூடுவாஞ்சேரியில் அதிமுக பிரமுகர் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழ்ச்செல்வனை வழிமறித்து வெட்டியது கும்பல்.
தப்பிக்க முயன்ற தமிழ்ச்செல்வனை விரட்டிச் சென்று வெட்டியது 4 பேர் கொண்ட கும்பல்.

சிசிடிவியில் பதிவாகி உள்ளது நெஞ்சைப் பதற வைக்கும் இந்த படுகொலைச் சம்பவம்.

இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இதே பகுதியில் திமுக பிரமுகர் வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ள நிலையில்
இன்று அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

தொடரும் வன்முறைகளால் கூடுவாஞ்சேரி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி தமிழ்ச்செல்வன் – அதிமுக பேரூர் செயலாளர், விஸ்வநாதபுரம் என்ற இடத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் போது வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img