இன்னொருத்திய கட்டிப்பேன்.. கணவனின் மிரட்டலால் மனைவி எடுத்த விபரீத முடிவு!

Published:

susaid
susaid

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராகம்பாளையம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் நெல்வாய் கிராமத்தில் வசித்து வரும் சசிகலா என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு வாசினி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக குடும்ப பிரச்சனை காரணமாக கணவனை விட்டு பிரிந்து இருந்த சசிகலா தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனையடுத்து பாஸ்கர் தனது மனைவியின் வீட்டிற்குச் சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்ததால், தன்னுடன் வரவில்லை என்றால் தான் கண்டிப்பாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி அவரை மிரட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து கணவனின் இந்த செயலால் மனமுடைந்த சசிகலா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு இவருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆவதால் ஆர்,டி.ஓ-வும் விசாரணை நடத்தி வருகிறார்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Related articles

Recent articles

spot_img