money 2
money 2

தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்துவது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் இதுபோன்று பணம் கொடுப்பது தமிழகத்தில் அதிகம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனை தடுக்க தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தாண்டு தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் கட்டுகட்டாக மிகப்பெரிய தொகை சிக்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதாவது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.127.64 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணமும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அடுத்ததாக, மேற்கு வங்காளத்தில் ரூ.112.59 கோடி மதிப்புள்ள பொருட்களும், அசாமில் ரூ.63 கோடியே ரூ.75 லட்சமும், கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சமும், புதுச்சேரியில் ரூ.5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

பணம் கொண்டுச்சென்றவர்கள், பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுப்பதுடன் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending