கள்ளக் காதலர்களை வரவழைத்து கணவனின் கழுத்தை நெறித்துக் கொன்ற மனைவி!

Published:

srinivasan
srinivasan

கோபிசெட்டிபாளையத்தில் புரோட்டா மாஸ்டருக்கு ஆசைப்பட்டு கணவரை தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்றிருக்கிறார் ஒரு கொடூர மனைவி.

கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் நஞ்சப்ப நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரே சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரபா எந்த நேரமும் செல்போனும் கையுமாக இருந்திருக்கிறார்.

பல ஆண் நண்பர்களுடன் பேசி அரட்டை அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தனக்கு ஒரு மகள் இருப்பதையும், எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் அவர் இப்படி செய்து வந்திருக்கிறார்.

பகல் முழுவதும் சீனிவாசன் சலூன் கடையில் இருந்ததால், பிரபாவின் இந்த லீலைகள் எல்லாம் அவருக்குத் தெரியாமல் போய் இருக்கிறது. தற்போது ஊரடங்கு என்பதால் கையும் களவுமாக சிக்கி கொண்டிருந்திருக்கிறார் பிரபா.

ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் வீட்டிலேயே இருந்துள்ளார் சீனிவாசன். அப்போது பிரபாவின் செல்போனுக்கு தொடர்ந்து போன்கால்கள் வந்து கொண்டே இருந்திருக்கின்றன .

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
prabha
prabha

பிரபாவும் செல்போனை எடுத்துக்கொண்டு தனியே சென்று பேசி வந்திருக்கிறார். இதில் சந்தேகப்பட்ட சீனிவாசன், பிரபாவை அடித்து உதைத்து இருக்கிறார் இதனால் ஆவேசமான பிரபா, கணவன் இருக்கும் வரை தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்து, கணவரை தீர்த்து கட்டி விட முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக அவர் குமாரபாளையத்தில் சலூன் கடை நடத்தி வரும் வெள்ளியங்கிரி, புரோட்டா மாஸ்டர் சரவணகுமார் இருவரிடமும் யோசனை கேட்டிருக்கிறார். அவர்கள் கொடுத்த ஐடியாவின்படி கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டார். இதில் சீனிவாசன் அயர்ந்து தூங்கிவிட்டார்.

Saravana kumar
Saravana kumar

கணவர் தூங்கியதும், ஆண் நண்பர்களுக்கு போன் போட்டு பிரபா விசயத்தை தெரிவித்ததும், சிறிது நேரத்தில் வெள்ளியங்கிரியும், சரவணகுமாரும் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அப்போது தூங்கிக் கொண்டிருந்த சீனிவாசனின் கழுத்தில் கையிற்றை சுற்றி இறுக்கியுள்ளனர். கயிறு இறுக்கியதில் தூக்கம் கலைந்த சீனிவாசன் உயிர்பிழைக்க கால்களை போட்ட அடித்துக்கொண்டு துடிதுடித்திருக்கிறார்.

காலை அடித்துக்கொண்ட சத்தம் கேட்பதால் சீனிவாசன் கால்களை இறுக பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார் பிரபா. கணவர் இறந்ததும் ஆண் நண்பர்கள் கொடுத்த ஐடியாவின் படியே, கணவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். இரண்டு நாட்களாக கணவருக்கு சளி, இருமல் இருந்ததாகவும் தற்போது மூச்சுத்திணறல் அதிகம் ஏற்பட்டுள்ளது . அதனால் இங்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். சீனிவாசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

சீனிவாசன் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடி வந்துள்ளார் அவரது உறவினர் மாரிமுத்து. சீனிவாசனின் உடலைப் பார்த்து அழுதிருக்கிறார். அப்போது சீனிவாசனின் கழுத்தில் காயங்கள் இருந்தது கண்டு அதிர்ந்து இருக்கிறார். இதனால் சீனிவாசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர் மருத்துவர்களிடம் தெரிவித்ததும் உடனே கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

veliyangiri
veliyangiri

போலீசார் வந்து பிரபாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து பிரபாவை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி சலூன் கடை வெள்ளியங்கிரி, புரோட்டா மாஸ்டர் சரவணகுமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.

அப்பாவியாய் தவித்துக் கொண்டிருக்கிறாள் மகள்.

Related articles

Recent articles

spot_img