கொரோனா: கணவனை இழந்த தலைமை நர்ஸ் உயிரிழப்பு! 3 பெண் குழந்தைகள் பரிதவிப்பு!

சற்றுமுன் தமிழகம்
ezhilarasi
ezhilarasi

கொரோனாவுக்கு, குடியாத்தம் தலைமை செவிலியர் உயிரிழந்தார். அவரது மூன்று பெண் குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கின்றன.

வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டைச் சேர்ந்தவர் எழிலரசி, 35; குடியாத்தம் அரசு மருத்துவமனையில், தலைமை செவிலியர். இவரது கணவர், உடல் நலக்குறைவால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

கடந்த, 4ம் தேதி எழிலரசி மற்றும் நான்கு டாக்டர்களுக்கு கொரோனா உறுதியானது. அவர்கள், வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எழிலரசி தவிர, மற்ற டாக்டர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேல் சிகிச்சைக்காக வேலுார் சி.எம்.சி., மருத்துவமனைக்கு எழிலரசி, 22ல் மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அவர் இறந்தார்

இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தாய், தந்தை உயிரிழந்த நிலையில், ஆதரவின்றி தவிக்கின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.