உலகில் மிக உயரமான, 146 அடி உயரத்தில் உள்ள முருகன்.. ஏப்ரல் 6 இல் கும்பாபிஷேகம்!

Published:

murugan - 2026

உலகில் மிக உயரமாக, 146 அடி உயரத்தில், 3 கோடி ரூபாயில் கட்டப்பட்ட முருகன் சிலைக்கு, ஏப்., 6ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த முத்து நடராஜன், 2015ல், புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, மலேஷியாவில் உள்ள முருகன் சிலையை போன்று அமைக்க முடிவு செய்தார்.

மலேஷியாவில் சிலை வடிவமைத்த, திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன், 50, அழைத்து வந்து, உலகில் பெரிய முருகன் சிலையை, 3 கோடி ரூபாயில் கட்ட முடிவு செய்தார்.

தொடர்ந்து, 2016 செப்., 6ல் பூமிபூஜை போட்டு பணி துவங்கியது. 2018ல், முத்துநடராஜன் உடல் நலக்குறைவால் இறந்தபோதும், அவரது மகன்கள் ஸ்ரீதர், 50, வசந்தராஜன், 55, ஞானவேல், 52, மகள் பத்மாவதி, 50, ஆகியோர், பணியை தொடர்ந்தனர்.

திருப்பணி குழு நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர் கூறுகையில், ”126 அடி உயர முருகன் சிலை, 20 அடி உயர பீடம் என, 146 அடி உயரத்தில், ஏழு கோண வடிவமைப்பில் அறுபடை முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
murugan 1 - 2026

ஏப்., 6ல் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,” என்றார்.ஸ்தபதி தியாகராஜன் கூறுகையில், ”மலேஷியா முருகன் சிலை வேல் பிடித்தது போல் இருக்கும்; இங்குள்ள சிலை, வலது கையில் ஆசீர்வாதம், இடது கையில் வேல், சிரித்த முகத்துடன் தலையில் மணிமகுடம் சூடி அமைக்கப்பட்டுள்ளது.

ஆடை, அணிகலன் அமைத்து, பஞ்சவர்ணத்தில் வண்ணம் தீட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆசிய கண்டத்திலும், உலகளவிலும் பெரிய முருகன் சிலையாக இருக்கும் என்பதால், சுற்றுலா தலமாக இந்த இடம் மாறும்,” என்றார்.

Related articles

Recent articles

spot_img