Kangaroo - 2026

வளர்ப்பு நாயை காப்பாற்ற போனவர்.. உதை விட்ட கங்காரு..!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
Kangaroo - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

காட்டு விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. இதன் காரணம் இவற்றுக்கு இருக்கும் வித்தியாசமான ஸ்டைலாகும். சில நேரங்களில் விலங்குகள் மோதிக்கொள்வதையும், சில நேரங்களில் கொஞ்சிக்குலாவுவதையும் நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம்.

சில வீடியோக்களில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பும் காணப்படுகின்றது. தற்போது வெளியாகியுள்ள காணொலியிலும், கங்காரு ஒன்று ஒருவரை தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

ஆனால் இந்த தாக்குதல் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இதைப் பார்த்தால் அனைவருக்கும் கண்டிப்பாக சிரிப்பு வரும்.

ஒரு நாயைக் காப்பாற்ற செல்லும் ஒருவர், தானே கங்காருவிடம் சிக்கிக்கொள்வதை இந்த வீடியோவில் காணலாம். அந்த நபர் தப்பினோம் பிழைத்தோம் என அலறி அடித்துக்கொண்டு ஓடுவதையும் காண முடிகின்றது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தனது நாயைக் காப்பாற்ற கங்காருவின் அருகில் ஒருவர் செல்வதைக் காண முடிகின்றது. கங்காரு தனக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என அவருக்கு தோன்றுகிறது. ஆனால், கங்காருவின் அருகில் அவர் சென்ற உடனேயே, அது அவரை தன் கால்களால் தாக்குகிறது.

கங்காரு கொடுத்த உதையால் அந்த நபர் விழுந்துவிடுகிறார். மறுபுறம் இதைப் பார்த்த அந்த நபரின் குழந்தைகளும் உறவினர்களும் வெகுவாக சிரிப்பதையும் வீடியோவில் கேட்க முடிகின்றது.

இந்த வீடியோவைப் பார்க்கும் போது அந்த நபர் சுற்றுலா போல் குடும்பத்துடன் காட்டிற்கு வந்திருப்பது தெரிகிறது. அப்போது அவருடைய வளர்ப்பு நாயின் அருகில் கங்காரு வருகிறது. அதைக் காப்பாற்ற செல்லும் நபர் பரிதாபமாக தாக்கப்படுகிறார்.

இந்த வீடியோ nature27_12 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவுக்கு சமூக ஊடக பயனர்கள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.