amaniswarar - 2026

அமணீஸ்வரர் கோவிலில் 14 ஆம் தேதி கும்பாபிஷேகம்!

சற்றுமுன் ஆலயங்கள் தமிழகம்
amaniswarar - 2026

பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், வரும், 14ம் தேதி கும்பாபிேஷகத்தையொட்டி, யாக சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது.பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், சுயம்புவாக அமணீஸ்வர் காட்சியளிக்கிறார்.

இந்த கோவில் அமைக்கப்பட்டு, 200 ஆண்டுகளுக்கு மேலாகிறது.கடந்த, 14 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கோவில் புனரமைப்பு பணிகள் கடந்த, இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது.

திருப்பணிகள் முடிவடைய உள்ளதால், வரும், 14ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, யாக சாலை அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.

மொத்தம், 15 யாக குண்டம் அமைக்கப்பட்டு, நான்கு கால யாக பூஜைகள் நடக்கிறது. வரும், 12ம் தேதி காலை, 8:30 மணிக்கு, மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் விழா துவங்குகிறது.மாலை, 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகளும், இரவு, 8:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.

amaniswarar temple - 2026

வரும், 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை, இரவு, 8:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது.

வரும், 14ம் தேதி காலை, 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை, 8:00 மணிக்கு டி.கோட்டாம்பட்டி பகுதி பொதுமக்கள் நடத்தும் அன்னதானம், காலை, 9:50 மணிக்கு மேல் விமான கும்பாபிேஷகம், விநாயகர், முருகன், அருளுடைநாயகி சமேத அமணீஸ்வர சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.

தொடர்ந்து, தசதானம், தசதரிசனம், மகா கும்பாபிேஷக விழா, அலங்கார பூஜைகள் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 5:00 மணிக்கு திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.