இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அ.தி.மு.க. -இபிஎஸ்

தனது சொந்த கட்சி கூட்டம் நடைபெறக்கூடாது என்று சொன்ன ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான். அ.தி.மு.க. கம்பெனி இல்லை. எடப்பாடி பழனிசாமி இந்த பதவியில் இல்லை என்றால் ஒரு சின்னச்சாமி இந்த பதவிக்கு வருவார். என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டத்தில் பேசினார்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக பதவிக்கு வந்தவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நானும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வில் கிளை கழக செயலாளராக பணிபுரிந்த நான் இங்குள்ள மூத்த தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கிறேன்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வகுத்த பாதையில் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்க கடுமையாக உழைப்பேன். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய நீங்களும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். இதன் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். அ.தி.மு.க.வில் இருந்து எட்டப்பர்கள் வெளியேறலாம். உண்மை தொண்டர்கள் யாரும் செல்ல மாட்டார்கள். எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. நாம் ஆட்சிக்கு வந்த போது மு.க.ஸ்டாலின் ஒருமாதம் கூட ஆட்சி நீடிக்காது என்றார். ஆனால் 4 ஆண்டுகளுக்கும் மேல் நாம் சிறப்பாக ஆட்சி செய்தோம். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

அ.தி.மு.க.வில் பிரச்சினை தொடங்கிய பிறகு மூத்த தலைவர்கள் பலமுறை ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசி இருக்கிறார்கள். நாம் சமாதானமாக இருக்கலாம். யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம். ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும். மக்கள், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணம் ஒற்றை தலைமை. அதற்கு நீங்கள் இசைந்து கொடுங்கள் என்றனர். அவர் இசைந்து கொடுக்கவே இல்லை. இரட்டை தலைமையால் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு தெரியும். நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு தெரியும். மக்களின் எண்ணத்துக்கு ஏற்றுவாறு செயல்பட்டால் தான் நாம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். ஒற்றை தலைமை என்று ஒலித்த குரல் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஓ.பன்னீர்செல்வம் எதற்கு எடுத்தாலும் விட்டுக் கொடுக்கிறேன் என்பார். நீங்கள் எதை விட்டுக் கொடுத்தீர்கள்? நாங்கள் தான் விட்டுக்கொடுத்தோம். நீங்கள் எப்போதுமே விட்டுக்கொடுக்கவில்லை. அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்று சொல்கிறார். நீங்கள் எப்போது அம்மாவுக்கு விசுவாசமாக இருந்தீர்கள். அம்மா 1989-ல் தேர்தலை சந்தித்த போது நீங்கள் எதிர் அணியில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு மூத்த ஒரு தொண்டனாக இருந்தீர்கள். நீங்கள் எப்படி அம்மாவுக்கு விசுவாசம். அம்மா வெற்றி பெறக்கூடாது என்று எதிர் அணிக்கு மூத்த ஏஜெண்டாக இருந்தீர்கள். நான் 48 ஆண்டுகாலம் அ.தி.மு.க.வில் விசுவாசமாக செயல்பட்டுள்ளேன். நான் முதல்-அமைச்சராக இருந்த போது உங்களில் ஒருவனாகத்தான் நான் இருந்தேன். இப்போதும் உங்களில் ஒருவனாகத்தான் நான் இருக்கிறேன். எப்போதும் உங்களில் ஒருவனாகத்தான் இருந்து செயல்படுவேன். எனக்கு கட்சி தான் உயிர். தனது சொந்த கட்சி கூட்டம் நடைபெறக்கூடாது என்று சொன்ன ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான்.

அ.தி.மு.க. கம்பெனி இல்லை. எடப்பாடி பழனிசாமி இந்த பதவியில் இல்லை என்றால் ஒரு சின்னச்சாமி இந்த பதவிக்கு வருவார். ஓ.பி.எஸ்.சுக்கு சுயநலம் உண்டு. தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதே அவரது குறிக்கோள். இவ்வாறு அவர் பேசினார்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
1727392 eps - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories