tambaram kollam spl train2343 1522393916 - 2026

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- சிறப்பு ரயில் நவம்பர் வரை நீட்டிப்பு..

சற்றுமுன்

கொல்லம் தென்காசி ராஜபாளையம் காரைக்குடி வழியாக இயங்கி கொண்டிருக்கும் எர்ணாகுளம் – நாகப்பட்டினம் (வேளாங்கண்ணி)-எர்ணாகுளம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற நவம்பர் மாதம் வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

tambaram kollam spl train2343 1522393916 - 2026

நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் சோதனை ஓட்டம் வருகின்ற 20.07.2022 அன்று நடைபெற்றிருக்கிறது அதன் பிறகு இந்த மாதமே வேளாங்கண்ணி வரை இந்த ரயில் இயக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த ரயிலை வாரமிருமுறை இயக்கவும் அடுத்த வருடம் தினசரியாக இயக்கவும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கேரளா பாராளுமன்ற உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் கூறியுள்ளார்.மேலும் கொல்லம்- திருப்பதி, குருவாயூர் -புனலூர் இடையே இயங்கும் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் வழி மதுரை வரை நீடித்தது இயக்க கொல்லம் எம்.பி பிரேமசந்திரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.மேலும் முன்பு மீட்டர் கேஜ் பாதையில் கொல்லம் சென்னை இடையே கொல்லம் எக்ஸ்பிரஸ் கொல்லம் மெயில் என இரு ரயில்கள் இயக்கப்பட்டது.தற்போது அகல ரயில் பாதையாக மாறிய பின் கொல்லம் -செங்கோட்டை -ராஜபாளையம்-சென்னை இடையே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.மேலும் ஒரு அதிவேக ரயில் திருவனந்தபுரம் -கொல்லம் -செங்கோட்டை -ராஜபாளையம்-சென்னை இடையே இயக்க கேர்ள் எம்.பி க்கள் ரயில்வே வாரியத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.

IMG 20220715 WA0169 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.