மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் : ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை!

சற்றுமுன்

அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த ஆலோசனையின்போது ரஜினி பேசியதாவது:- அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள்வது அவசியம். அரசியலில் அடிப்படை கட்டமைப்பு தான் முக்கியம். 32 மாடி அஸ்திவாரம் போல 32 மாவட்டங்களில் கட்டமைப்பு முக்கியம். அனைத்து ரசிகர்களையும் சந்திக்க சில நாட்கள் ஆகும். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் வேலையை அமைதியாக செய்வோம்.

என் ரசிகர்களுக்கு மற்றவர்கள் அரசியல் கற்றுத் தரவேண்டாம். நீங்கள் மற்றவர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுப்பவர்கள். விரைவில் உங்களை உங்கள் மாவட்டத்தில் சந்திக்கிறேன். பெருகி வரும் ரசிகர்களின் ஆதரவை பார்க்கும்போது அரசியலில் நம்மால் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை அதிகமாகி வருகிறது என்றார்.​

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.