தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை 4வது நாளாக இன்றும் முடங்கியது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏர்செல் சேவையில் இருந்து மற்ற செல்போன் நிறுவனங்களில் சேவையை பெறுவதில் வாடிக்கையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ‘போர்ட் அவுட்’ முறையில் மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுக்கு செல்வார்கள். இப்போது 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்துள்ளநிலையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் போர்ட் சர்வரை பயன்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் போர்ட் அவுட் சர்வரில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் அது சரியாகி வரும். அவரவர்களுக்கு போர்ட் அவுட் எண் கிடைக்கும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் செல்போன் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.போர்ட் அவுட் முறையை பயன்படுத்தி கொள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் ஏர்செல் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.



