அரியலூர் அருகே பள்ளி வேன்- லாரி மோதி விபத்து: 4 பேர் பலி

Published:

அரியலூர்: அரியலூர் புறவழிச் சாலையில் தனியார் பள்ளி வேன்- லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். கல்லங்குறிச்சி என்ற இடத்தில் தனியார் பள்ளி வேனுடன் டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பள்ளியில் இருந்து மாணவர்களை வீட்டுக் கொண்டு விடச் சென்ற போது, பள்ளி வேன் விபத்தில் சிக்கியது. இதில், பள்ளிக் குழந்தைகள் சூர்யா, காஞ்சனாதேவி, வேன் ஓட்டுனர் சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். குழந்தைகளுக்கு பாதுகாப்பாகச் சென்ற பணியாளர் வாசுகி என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். பள்ளி வேன் விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img