மத கூட்டத்துக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு சுங்கச் சாவடி கட்டண விலக்கு கோரும் அதிமுக., எம்பி.,!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
anwarrajamp - 2026

இஸ்லாமிய கூட்டமொன்றுக்கு அதிகம் பேர் வருவார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அன்வர்ராஜா எம்பி., கடிதம் எழுதியுள்ளார்! இது இப்போது சமூகத் தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது!

தமிழ்நாடு மாநில அளவிலான மூன்று நாள் இஸ்லாமியர்களின் கூட்டம் திருச்சியில் உள்ள இனாம் குளத்தூரில் நடைபெற உள்ளது. இதில் 15 முதல் 20 லட்சம் இஸ்லாமிய யாத்திரீகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலிருந்து இந்நிகழ்ச்சிக்கு யாத்திரிகர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது எனவே அவர்கள் வரும் அந்த மூன்று தினங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் யாத்திரிகர்களுக்கு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அன்வர்ராஜா எம்பி திட்ட இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் திருச்சிராப்பள்ளி என்று அவர் எழுதியுள்ள இந்த கடிதத்தில் ஜனவரி 25 லிருந்து ஜனவரி 29 வரை கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்!

ஆனால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு எம்பியாக இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கு கரிசனம் காட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருப்பதை வேறு மாதிரியாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்!

இஸ்லாமிய எம்பி தன் மதத்தின் தலைவர்கள் சொல்படி அவர்களின் ஆணைப்படி செயல்படுகிறார்! ஆனால் இந்து எம்பி.,க்கள் எத்தனை பேர் இருந்தாலும் இந்து மதப் பண்டிகைகள் என்றால் எதற்கும் ஆதரவு தருவது இல்லை! இது போன்று எந்த சூழ்நிலையிலும் கோரிக்கைகள் கூட விடுப்பதில்லை என்று விமர்சிக்கிறார்கள்

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் போது மணிக்கணக்கில் காத்திருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தி செல்கின்றனர். ஆனால் ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிக்கு கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் எம்.பி., அன்வர்ராஜாவின் கடிதம் இப்பொழுது விவாதப் பொருளாகியுள்ளது!

anwar raja letter for tollgate free - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.