அமித் ஷா ஓரிரு நாளில் சிகிச்சை முடிந்து திரும்புவார்: பாஜக., தகவல்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
07 June24 Amith shah - 2026

புது தில்லி: பன்றிக்காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா இன்னும் ஓரிரு நாளில் சிகிச்சை முடிந்து திரும்புவார் என்று பாஜக., தகவல் தெரிவித்துள்ளது.

பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலூனி இது குறித்து வெளியிட்ட தகவலில், அமித்ஷா குணமடைந்து வருகிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். அவர் நலம் பெற ஒவ்வொருவரும் செய்த பிரார்த்தனையால் விரைவி்ல் உடல் நலம் தேறி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்..

பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா பன்றிக் காய்ச்சல் காரணமாக தில்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட செய்தியில், ‘பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளேன். கடவுள் மற்றும் மக்களின் அன்பு வேண்டுதலுடன் விரைவில் குணமடைவேன்’ என கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.