December 5, 2025, 11:27 AM
26.3 C
Chennai

BoycottTurkey – துருக்கி புறக்கணிப்பு; இப்போ இந்திய அரசும் தொடங்கிடுச்சு!

boycot turkey amid tensions over indo pak issue - 2025

இந்திய விமான நிலையங்களில் முக்கிய பணிகளைச் செய்து வரும் துருக்கி நிறுவனம் Celebi Aviation-க்கு மத்திய அரசு வழங்கிய பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலில் வருகிறது. தில்லி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் பணிகளில் ஈடுபட்டு வந்த துருக்கி நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது.

“பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஏவுகனைத் தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல்” – என்றால்  துருக்கியின் எர்டோகன். மேலும், பாகிஸ்தானுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று அவரே வெளிப்படையாக ஆதரவும் தெரிவித்தார். முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர்களையும் துருக்கி வழங்கியது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் துருக்கி நாட்டைச் சேர்ந்த ட்ரோன் ஆபரேட்டர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், துருக்கிக்கு பதிலளிக்கும் வகையில், அரசும் துருக்கியின் மீதான உறவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சீர்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது.

இந்தியா எவ்வளவு உதவி செய்தாலும், அதனை மதிக்காமல் துருக்கி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது.  இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டுடனான ஒப்பந்தத்தை இந்திய கல்வி நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன. சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. துருக்கியில் இருந்து ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப் போவதில்லை என மும்பை வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ராஜஸ்தான் மார்பிள் டிரேடர்ஸ் குழுவினர் துருக்கியில் இருந்து மார்பிள்கள் இறக்குமதி செய்யப் போவதில்லை என திருப்பி அனுப்பினர். தொடர்ந்து துருக்கிக்கு எதிரான இந்தியர்களின் கோபம் கூடிக் கொண்டே போனது. இந்நிலையில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் துருக்கியுடனான கல்வி தொடர்பில் மறூபரிசீலனை செய்தது. 

இந்நிலையில் இந்தியாவில் தில்லி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் முக்கியமான சில பணிகளை துருக்கியைச் சேர்ந்த செலிபி நிறுவனம், இந்திய அரசின் அனுமதியுடன் செயல்படுத்தி வந்தது. அந்த செலிபி நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவந்தது. இதை அடுத்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செலிபி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்புதலை உடனடியாக திரும்ப பெறுகிறோம் – என்று அறிவித்தது. 

இந்த செலிபி நிறுவனம் இரண்டு குழுக்களாக இந்தியாவில் செயல்படுகிறது. செலிபி இந்திய விமான சேவைகள் என்று நிறுவனம் மூலம் விமானங்கள் தரையிறங்குவது தொடர்பான பணி நடந்து வந்தன. தில்லி சரக்கு முனைய நிர்வாக இந்தியா என்ற நிறுவனம் மூலம் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் பணி நடந்தது. இவற்றில் சாய்வு தள சேவைகள், விமானம் சுமுகமாக பயணம் செய்யும் வகையில் எடை மேலாண்மை மற்றும் விமான செயல்பாடுகள், விமானத்தில் ஏற உதவும் வாகனங்கள், சரக்கு, அஞ்சல் சேவை மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் செய்து வந்தது.

எதிரி நாடான பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்யும் துருக்கி நாட்டின் நிறுவன சேவைகளை இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்த சேவை ரத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நெருக்கடிகளை துருக்கிக்கு இந்தியா அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்த காலம் மலையேறி விட்டது. பேரிடர் காலத்தில் துருக்கிக்கு பாரதம் உதவியதும் ஒரு பெரிய தவறுதான். துருக்கியிலிருந்து மார்பிள் வாங்குவதை பாரதத்தின் வடக்குப் பகுதி வணிகர்கள் முற்றாக நிறுத்திவிட்டனர். ஆப்பிள் சந்தைக்கும் ஆப்படித்து விட்டனர். சுற்றுலாப் பயணிகளும் துருக்கிப் பயணத்தை நிறுத்தி வருகின்றனர். துருக்கிக்கு பலகோடி மதிப்புள்ள வணிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கஸ்வா ஏ ஹிந்த், அல் உம்மா,  தார் அல் இஸ்லாம் கோட்பாடுகளை 21ம் நூற்றாண்டில் செயல்படுத்த இயலாது என்பதை துருக்கி இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 

இஸ்லாமிய அரபு நாடுகள் உணர்ந்து கொண்டு விட்டன. இன்று அவை ஆக்கப் பாதையில்! பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு உதவி செய்யத் துடிக்கும்  துருக்கியால் சீனாவின் உய்குர் முசுலிம்கள் மதரசா நடத்தவும், ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் உதவ முடியுமா?! – என்ற கேள்விகளை எழுப்புகின்றனர் இந்தியர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories