
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஈடி அலுவலகத்தில் விசாகனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 8 மணி நேரத்துக்கு மேலாக அவரது வீட்டில் விசாரணை நடந்த நிலையில் விசாகனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி முறைகேடு தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சென்னை, சூளைமேடு, கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகத்தில அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு புகாரில் விசாகனை அழைத்துச் சென்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன், அவரது மனைவி ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விசாகனை காரில் அழைத்துச் சென்றனர். விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.





