ஹரிஜனங்களின் உயர்வைக் காணத் துடித்த ‘ஐயர்’!

madurai vaidhyanatha iyer - 2026
  • ராம்குமார். வி

‘மதுரை வைத்தியநாத ஐயர்’ – இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும்.

தமிழ் நாட்டில் தாழ்த்தப் பட்டோருக்காக பாடுபட்டவர்கள் தாங்கள் தான் என உரிமை கொண்டாடி அதனை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக்கொள்ளும் பலர் நிஜ தியாகிகளை சமூகத்திற்காக பாடுபட்டவர்களை திட்டமிட்டு மறைத்து விடுவர். சமூகத்தில் நடக்கும் இது போன்ற வெற்றுக் கூச்சல்கள் மதுரை வைத்யநாத ஐயர் போன்றவர்களை மறக்கடிக்கச் செய்துவிடும். அத்தகைய ஒருவரை பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகி இவர். ஹரிஜனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தியாகி ‘கக்கன்’ இவருடைய சீடர். 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தலைவர். இவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

மதுரை ஆலயப்பிரவேசம்:

1939 ஜூலை 8 ஐ தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திக்காட்டியவர் மதுரை வைத்யனாதய்யர். இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசும் பலரும் பிராமணர்களுக்கெதிரான வசைகளையே முன்னிறுத்தி பேசுவார்கள். அதே தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி அதற்கு தலைமை தாங்கியவர் இந்த பிராமணர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

அத்தகைய ஆலய பிரவேச தினத்தன்று தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச்செயலாளர் எல்.என்.கோபால்சாமி, P.கக்கன், உசிலம்பட்டி V.முத்து, P.R.பூவலிங்கம், V.S.சின்னையா, முருகானந்தம், ஆலம்பட்டி S.S.சண்முக நாடார் மற்றும் பல ஹரிஜன அன்பர்கள் வைத்யனாதய்யருடன் ஆலய பிரவேசம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் திரு R.S.நாயுடு இந்த நிகழ்வுக்குமிகவும் உதவியாக இருந்தார். மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததோடு தன் தோழர்களை அய்யருக்கு துணையாக அனுப்பினார்.

இந்த நிகழ்ச்சி மதுரையில் நடக்கும் போது மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட திரு N.M.R.சுப்பராமன் மதுரை நகராட்சி தலைவராக இருந்தார். இவர் ஒரு ஹரிஜனரை அறங்காவலர் குழுவில்நியமிக்கச் செய்தார். தமிழகத்தில் இது ஒரு முன் மாதிரி நடவடிக்கை.

திரு. வைத்தியநாத ஐயர் தமிழகத்தின் முக்கிய சுதந்திர போராட்டங்களான உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற முக்கிய போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அய்யரும் அவர் குடும்பமும் பல முறை தேசத்திற்காக சிறை சென்றுள்ளனர்.

ஈ.வெ.ரா.வை காப்பாற்றிய ஐயர்

‘பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி’ என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.

1946 ம் ஆண்டு வைகை வடகரையில் தி.க மாநாடு நடந்தது. தி.க தொண்டர்கள் மீனாட்சி கோயிலுக்கு சென்று கிண்டலும் கேலியும் செய்துள்ளனர். மதுரை மக்கள் தி.க தொண்டர்களை விரட்டி, மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். ஷெனாய் நகரில் இருந்த ஈ.வே.ரா வை மக்கள் சூழ்ந்து விட்டனர். போலீஸாரால் தடுக்க முடியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாத ஐயர் அங்கு சென்று மக்களை அமைதிப்படுத்தி ஈ வெ ரா உட்பட அனைவரையும் ஊருக்கு பத்திரமாக அனுப்பினார். ஆக பிராமணரை அடி என்று கூறிய ராமசாமி நாயக்கருக்கு பிராமணரான வைத்தியநாத ஐயர் பாதுகாப்பளித்த சம்பவம் இன்றும் அழியாத வரலாறாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என வெட்கமில்லாமல் திரியிம் திராவிடக்காரர்கள் இந்தச் சம்பவங்களை வஞ்சகமாக மறைத்து ராமசாமி நாயக்கருக்கு குருட்டுத்தனமான பக்தர்கள் உருவாக பெரிதும் பாடுபட்டனர்.

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

மதுரை வைத்தியநாத ஐயர் தான் இறக்கும் வரை (1955) ஹரிஜன சேவா சங்க தலைவராக இருந்தார். ஹரிஜன சேவா சங்கம் இவரை பாராட்டி ஹரிஜனங்களின் தந்தை என்று அழைத்தனர். சுதந்திரப் போராட்ட தியாகியை ஹரிஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பின்னர் வஞ்சகமாக மறக்கடிக்கப்பட்ட இந்த மாமனிதரை நெஞ்சினில் நிறுத்திடுவோம்.

நினைவில் வைத்துப் போற்றுவோம்.

மேலதிக தகவல்களுக்கு

1) ‘விடுதலை போரில் தமிழகம்’ ஸ்டாலின் குணசேகரன் – பாகம் 2
இந்த புத்தகத்தில் இந்த கட்டுரையை இயற்றியவர் தியாகி மாயாண்டி பாரதி. இவர் வைத்யனாதய்யருடன் நெருங்கி பழகியவர்.

2) ‘மதுரை காந்தி’ , நா.மா.ரா.சுப்பராமன் அல்லயன்ஸ் பதிப்பகம். சென்னை.

இப்படிப் பட்ட பல தியாகிகளின் தியாகங்கள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை. இந்த தியாகங்களை பற்றி வருங்காலத்திற்கு தெரிவிக்க வேண்டியது நம் கடமை.

கு. அண்ணாமலை போஸ்ட்

சுதந்திரப் போராட்ட வீரரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான, அமரர் மதுரை அ. வைத்தியநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று. தீண்டாமை, சமூக ஏற்றத் தாழ்வு முதலானவற்றை ஒழிக்கப் பாடுபட்டவர். சுதந்திரப் போராட்டத்தில், கதர் ஆடை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம், என அனைத்துப் போராட்டங்களிலும், தாம் மட்டுமல்லாது, தமது குடும்பத்தினரையும் ஈடுபடச் செய்தவர். சுதந்திரப் போராட்டத்துக்காக, தமது வழக்கறிஞர் பணியோடு, தமது சொத்துக்களையும் தியாகம் செய்தவர். ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக, பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, மக்களின் அன்பைப் பெற்றிருந்த அமரர். வைத்தியநாத ஐயர்

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories