ராஜபாளையத்தில் செயல்பாட்டுக்கு வந்த கண் நோய் சிறப்பு மருத்துவக் கட்டடம்!

சற்றுமுன் நலவாழ்வு மதுரை லைஃப் ஸ்டைல்
rajapalayam-pcr-gh
rajapalayam-pcr-gh

இராஜபாளையத்தில் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் கண்நோய்க்கு சிறப்பு மருத்துவக் கட்டடம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள பி ஏ சி ஆர் அரசு மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது இதில் கண் சிகிச்சைக்காக ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் அப்போதைய சூழ்நிலையில் அதிகமாக கொரோனா இருந்ததால் இந்த பகுதி முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்

தற்போது இந்த கட்டிடம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு கண்சிகிச்சை மருத்துவமனை கட்டிடமாக செயல்பட இன்று முதல் துவங்கியுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் மற்ற ஊர்களில் பகுதில் இல்லாத அளவிற்கு நவீன கருவிகள் மூலம் கண் சிகிச்சை பிரிவு செயல்பட துவங்கியுள்ளது குறிப்பாக பட்டஸ் கேமரா ஒருங்கிணைந்த சேர் இதுபோன்ற நவீன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்
பட்டுள்ளது

சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பட்டஸ் கேமரா மூலம் கண்களில் உள்ள பட்டஸ் பகுதியை படம் எடுத்து தங்கள் செல்போன் மட்டும் பிரிண்ட் அவுட் எடுத்து படங்களாக வைத்துக்கொள்ள முடியும் இதன் மூலம் கண்ணில் எந்தப் பகுதியில் நோய் தொற்று உள்ளதா என்பதை தெளிவாக பார்க்க முடியும் இது போன்ற நவீன வசதிகள் மாவட்டத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது

இதற்காக நான்கு மருத்துவர்களை நியமிக்கபட்டுள்ளனர் மருத்துவர் பொன்னுசாமி தலைமையில் மருத்துவர் நதியா, மருத்துவர் மினு, மருத்துவர் பாஸ்கர், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவ அதிகாரி பாபுஜி தலைமையில் மருத்துவம் பார்க்கப்பட்டது திட்ட இயக்குனர் சாந்தகுமார் உள்ளிட்டோர் நோயாளி சிறப்பாக பணியாற்ற மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்

மேலும் இவ்வளவு நவீன வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் லேசர் சிகிச்சை மற்றும் ஐ பேங்க் தேவைப்படுவதால் அதையும் அரசு செய்து கொடுத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பொது மக்களுடைய கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.