காங்கிரஸில் இருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் அறிவிப்பு: ராகுல் காந்தி காரணம் என்கிறார்

jayanthi_natarajan சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் மன உளைச்சலுக்குக் காரணம் என்று கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்தி நடராஜன் திடீரென 2013ஆம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது லோக்சபா தேர்தல் பணிக்காக ஜெயந்தி ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்தும் ஜெயந்தி நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஜெயந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். இந்நிலையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஜெயந்தி நடராஜன் எழுதிய கடிதம் ஒன்று ஊடகங்களில் இன்று வெளியாகி இருந்தது. அதில் தாம் கட்சிக்காக பாடுபட்ட விதம், தம்மை ராஜினாமா செய்ய சொன்னபோது நடந்தது என்ன? ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் மீதான அதிருப்தி என விவரிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த ஜெயந்தி நடராஜன், தாம் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்தவற்றை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் கட்சிப் பணிக்காக ராஜினாமா செய்த தம் மீது ராகுல் காந்தியால் அவதூறான செய்திகள் பத்திரிகைகள் மூலம் பரப்பப் பட்டன என்றும் ஜெயந்தி நடராஜன் குற்றம் சாட்டினார். அத்துடன் தாம் இணைந்தபோது இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும் ஜெயந்தி நடராஜன் அறிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை பொறுப்பில் இருந்தும் விலகுவதாகக் கூறிய அதே நேரத்தில், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலோ பிற கட்சியிலோ தற்போது இணையும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories