இலவச நாட்டுக்கோழித் திட்டம் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் தகவல்

Published:

08 July09 Udumali Radhakrishnan - 2026இலவச நாட்டுக்கோழித் திட்டம் 50 கோடி ரூபாயில் 77,000 பேருக்கு விரிவுபடுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஏற்கனவே 38,500 பேருக்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 77,000 பேருக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து வரும் 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மே 29-ஆம் தேதி தொடங்கிய நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்றுடன் முடிவடைகிறது. எனவே லோக் ஆயுக்தா சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related articles

Recent articles

spot_img