கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த வைகோ, தமிழிசை!

சற்றுமுன் சென்னை தமிழகம்

maxresdefault 20 - 2026

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலை பேசியில் விசாரித்துள்ளார். கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக ஸ்டாலினிடம் மோடி பேசினார். என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதி இல்லத்துக்கு தமிழிசை
சௌந்தர ராஜன் வந்திருந்தார். அவர் ஸ்டாலினிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கருணாநிதியின் உடல் நலம் விரைவில் மீள, அவருக்கு அளிக்கப் படும் மருந்துகள் பயன் தர இறைவனை பிரார்த்திப்பதாகக் கூறினார். #Karunanidhi

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்திருந்தார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ. அவரை வரவேற்ற மு.க.ஸ்டாலின், அவருடனும், க.அன்பழகன், துரை முருகன் உள்ளிட்டோருடனும் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, கருணாநிதியின் வீட்டுக்கு தலைவர்களும் தொண்டர்களும் திரண்டு வருகின்றனர். இதனால் கோபாலபுரத்தில் கம்பி வேலி அமைத்து போலீஸார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தொண்டர்கள் கூடுவதைக் கட்டுப் படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.