சென்னை: அக். 6ம் தேதி தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது.
இதனால், ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் 5ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தென் மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக உள் தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.