66 வது தேசிய திரைப்பட விருதுகள் – ஒரு கண்ணோட்டம்!

66filmfestivalaward - 2026

66வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

• தமிழில் பாரம் என்ற படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும்.

• தேசிய அளவில் சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி). சரியான தேர்வுதான். எதிர்பார்த்ததும் கூட.

• மலையாளத்தில் நல்ல படம் – சூடானி ஃப்ரம் நைஜீரியா. நல்ல தேர்வு.

• தேசிய அளவில் சிறந்த இசையமைப்பாளர் – சஞ்சய் லீலா பன்ஷாலி – பத்மாவத் படத்துக்காக. சரியான தேர்வு.

• தேசிய அளவில் சிறந்த பின்னணி இசை – யூரி படத்துக்காக. நல்ல தேர்வு. எதிர்பார்த்ததுதான்.

• தேசிய அளவில் சிறந்த ஒலிப்பதிவு – யூரி படத்துக்காக. எதிர்பார்த்ததுதான்.

• தேசிய அளவில் சிறந்த சமூகப் படம் – பேட் மேன். நல்ல தேர்வு.

தமிழுக்கு அதிகம் விருதுகள் தரப்படவில்லை என்றும் தமிழ் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்றும் ஆரம்பித்திருக்கிறார்கள். விருது கொடுத்தால் திருப்பித் தரவேண்டியது, மத்திய அரசைத் திட்டவேண்டியது, அப்புறம் விருது தரவில்லை என்று புகார் வாசிக்கவேண்டியது! விருதுக்கு எத்தனை படங்கள் இங்கே இருந்து அனுப்பப்பட்டன என்ற பட்டியலைப் பார்த்தால்தான் இன்னும் கொஞ்சம் புரியும். கிடைக்குமா என்று பார்க்கிறேன். (திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் இருந்தால் இப்பட்டியல் கிடைக்க வழி செய்யுங்கள்.)

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

சிறந்த அறிமுக இயக்குநராக மாரி செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். நால் என்றொரு மராத்தி படத்தின் இயக்குநர் தேர்வாகி இருக்கிறார். படத்தைப் பார்த்தால்தான் தெரியும் ஏன் இது தேர்வாகி இருக்கிறது என்று.

மற்றபடி தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. தமிழில் மிக முழுமையான முயற்சிகள் கைகூடவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு படம் வரும்போதும் அந்தப் படத்தின் குறைகளைப் பட்டியலிட்டுவிட்டு, போதாமையையெல்லாம் சொல்லிவிட்டு, விருதுகள் கிடைக்கவில்லை என்னும்போது தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதெல்லாம் அபத்தம்.

மற்றபடி இந்தத் தேசியத் திரைப்பட விருதுகளில் லாபியே இல்லை என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். லாபி இல்லாமல் எப்போதும் இருந்தால் அது சரியானது.

ஆனால் காங்கிரஸ் ஆளும் வரை லாபி இருந்தால் ஓகே, ஆனால் பாஜக ஆளும்போது லாபி கூடாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமல்ல. இன்னும் சொல்லப்போனால், பாஜக அரசிலும் இந்த லாபியில் இருப்பது காங்கிரஸ் + முற்போக்காளர்கள் மட்டுமே. பாஜக காரர்களுக்கு இன்னும் ஒரு திரைபடத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை.

நேற்றுதான் ஹெச்.ராஜா ஒரு ஸ்டேட்டஸை ஃபேஸ்புக்கில் இது குறித்துப் போட்டிருந்தார். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. லாபியில் கொஞ்சம் இந்திய தேசிய சினிமாக்களும் இந்தியத்தையும் ஹிந்து மதத்தையும் நிந்திக்காத சினிமாக்களும் சிறிது காலமாவது வெல்லட்டும்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

– ஹரன் பிரசன்னா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories