அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் : சீமான்

தமிழகத்தில்  ஜல்லிக்கட்டு நடத்த அரசாங்கம்  விதித்துள்ள தடை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் தொன்ம வீரவிளையாட்டுகளில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. மாட்டின் கொம்பின் மீது ஒரு துணியில் சல்லிக்காசுகளைக் கட்டித் தொங்கவிட்டு, மாட்டை அடக்குவோருக்கு அந்தக் காசுகள் சொந்தம் என விளையாடப்பட்டதால் இது ‘ஜல்லிக்கட்டு’ எனப்பட்டது.

நம் முன்னோர்களால் ஏறு தழுவுதல் என்று விளையாடப்பட்ட இவ்விளையாட்டு பெயர் மருவி இன்று ‘ஜல்லிக்கட்டு’ எனப்படுகிறது. உலகத்தில் எந்த இன மக்களும் மாடுகளுக்கு எனப் பண்டிகை வைத்துக் கொண்டாடியதில்லை. ஆனால், தமிழர்கள்தான் உழவுக்கு உதவி செய்ததற்காக நன்றிப்பெருக்கோடு மாட்டுக்குப் பொங்கல் வைத்துப் படையலிட்டு, மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறார்கள். அந்த மாட்டோடு கட்டித்தழுவி விளையாடும் வீரம்செறிந்த விளையாட்டுதான் இது. காரணத்தோடே எப்போதும் பெயரிடும் பழக்கமுடையத் தமிழர்கள் அதனாலேயே இதற்கு ‘ஏறு தழுவுதல்’ என்று பெயரிட்டார்கள்.

இது எதுவோ காலப்போக்கில் காட்டுமிராண்டித்தனமாக தோன்றிய விளையாட்டு அல்ல! காதலையும், வீரத்தையும் பின்னிப்பிணைத்து தமிழர்களின் பண்பாட்டை உலகுக்குச் சொல்லும் ஆதியில் விளையாட்டாகும். பழங்காலத்தில் மாட்டை அடக்குவோருக்கே தங்கள் பெண்ணை நம் முன்னோர்கள் மணமுடித்துக் கொடுத்தார்கள். இப்படி, தமிழர்களின் வாழ்வியலைச் சொல்லும் ஏறு தழுவுதலானது, சங்கக்காலத்திலேயே இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் நம்மிடையே இருக்கின்றன. மிக மூத்த நாகரீகம் எனச் சொல்லப்படும் சிந்துசமவெளி நாகரீகத்தில்கூட ‘ஏறு தழுவுதல்’ தொடர்பான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.அதனால், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாட்டோடும், வாழ்வியலோடும் தொடர்புடைய தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும்.

அரசின் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்.- சீமான் திட்டவட்டம்எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, ஆரத்தழுவி நேசித்து ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற பண்பாட்டைக் கொண்டு, பன்னெடுங்காலமாக அரிசி மாவில் கோலமிட்டு ஈ, எறும்புக்குக்கூட இரையிட்டவர்கள் தமிழர்கள் அப்படி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பேரன்பையும், பெருங்குணத்தையும் உடைய உயிர்நேயர்களான தமிழர்களா ஒரு உயிரை வதைத்து அதில் இன்பம் காண்கிறார்கள்? அதனால், தமிழர்கள் மாட்டைத் துன்புறுத்துகிறார்கள் என்பதே முற்றிலும் தவறானக் கூற்று. ஜல்லிக்கட்டு என்பது ஆதிமனிதனான தமிழன் மாட்டை உழவுக்குப் பழக்கிய உறவைச்சொல்லும் விளையாட்டு.அதனால், ஜல்லிக்கட்டுக்குத் தடை என்பது தமிழர்களின் அடையாளத்தையும், தொன்மையையும் அழித்துச் சிதைப்பதற்கு நடக்கும் திட்டமிட்ட சதி. அதனை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது. அதனால், இவ்வாண்டு ஜல்லிக்கட்டுக்கு அரசு தடைவிதித்தாலும் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தி தமிழனின் தொன்மையையும், பெருமையையும் உலகுக்கு நிலைநாட்டுவோம். என்று சீமான் விடுத்துள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories