தென்காசியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா பறிமுதல்

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
pan masal goods - 2026

நெல்லை மாவட்டம் தென்காசி திருநெல்வேலி சாலையில் கடபோகத்தி என்கின்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் கடபோகத்தி அந்த கால்வாயின் அருகில் சாலையின் தென்புறம் தனியார் ஒருவருக்கு சொந்தமான குடோன் உள்ளது.

இந்த குடோனில் பளிங்கு கற்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வளாகத்தில் ஏராளமான கடைகளும் கட்டப் பட்டுள்ளன,

இந்த நிலையில் இந்த குடோனில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் போதைவஸ்து பொருட்களான பான்மசாலா, கணேஷ் புகையிலை,உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து,  அவர் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு அந்த பகுதியில் சோதனையிட உத்தரவிட்டார். தொடர்ந்து குற்றாலம் காவல்துறை ஆய்வாளர் ஜெய்சல் குமார்,மற்றும் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் 5 உதவி ஆய்வாளர்கள், 25க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை நடத்தினர்

அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் புகையிலை.பணமசாலா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய். அத்தனை பொருட்களையும் பறிமுதல் செய்து அவற்றை உணவு பாதுகாப்புத் துறையினரிடம் வழங்கினர். இது தொடர்பாக ஒரு நபரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்

இவ்வளவு மதிப்பில் பான் பொருள்கள் பிடிபட்ட சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.