கனமழையால் திருவாரூர் செல்லாமலேயே திருச்சி திரும்பினார் முதல்வர் எடப்பாடி!

Published:

edappadi palanisamy2 - 2026

திருச்சி திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கனமழை காரணமாக நாகை, திருவாரூர் பயணம் ரத்து  செய்யப் பட்டுள்ளது. தொடர்ந்து, திருச்சிக்கு திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

முன்னதாக, புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் முதல்வர். வீடுகளை இழந்த 5 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். பட்டுக்கோட்டை சூரப்பள்ளத்தில் தென்னந்தோப்பில் கஜா புயல் சேதத்தை ஆய்வு செய்த பின் முதல்வர் நிதியுதவி வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்; யாரும் விடுபட மாட்டார்கள். கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக சேதமடைந்துள்ளது. கஜா புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமர் மோடியை வரும் 22ஆம் தேதி சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது.

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அப்போது தான் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெறும் என்று, புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குளம் பகுதியில் ஆய்வுக்குப் பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இதனிடையே, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதை அடுத்து, அவர் நாகை, திருவாரூர் செல்லாமல் பயணத்தை ரத்து செய்து, திருச்சிக்கு திரும்பினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img