கோவில் சுவரில் கிறிஸ்துவ பிரசாரம்! வெட்கமா இல்லையா?! #தூ

Published:

periambur chembiom amman temple3 - 2026

சென்னை -செம்பியம் இந்துக்களே நன்றாக தூங்குங்கள்; கருமாரியம்மன் கோவிலை கன்னிமேரி அம்மன் கோவிலாக மாற்றப் போகிறார்கள் எச்சரிக்கை… என்று கூறுகிறார் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ராம.ரவிக்குமார்.

சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியிலுள்ளது அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில். சென்னை பெரம்பூர் செம்பியம் ராகவன் தெரு பகுதியில் உள்ள இந்த அம்மன் கோயில் சுற்றுச் சுவரில், கோயிலுக்கு உரிய வெள்ளை அடித்து செம்மண் காவி தீட்டவில்லை. மாறாக, சுவரில் எழுதப்பட்ட ஒரு வாசகம் காண்போரை கொதிப்படைய வைத்துள்ளது.

“இயேசு கிறிஸ்து அன்றும் இன்றும் என்றும் மாறாது இருக்கிறார் .”
– என்று கோவில் சுவரில் வாசகம் எழுதிப் போட்டிருப்பது கடந்து செல்லும் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

periambur chembiom amman temple1 - 2026

இந்துக் கோவில் சுவர்களில் வந்து பைபிள் வாசகம் எழுதுவது, இந்து கோவில் சுவர்களை ஒட்டி புதியபுதிய சர்ச்சுகள் கட்டுவது, இதுதான் கிறிஸ்தவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை என்று குமுறுகிறார்கள் அங்குள்ளவர்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் ராம.ரவிக்குமார், “எம்மதமும் சம்மதம் ” என்று பரந்த மனசு பேசி பாழாய்ப்போன இந்துக்களே நன்றாக தூங்குங்கள். செம்பியம் அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில் விரைவில் “மேரி அம்மன் ஆலயமாக” மாறப் போகிறது. அப்பொழுதும் நீங்கள் சொல்வீர்கள் எம்மதமும் சம்மதம் என்று ….

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!
periambur chembiom amman temple2 - 2026

எந்த ஒரு இந்துவும் கிறிஸ்தவ சர்ச்சுகளின் காம்பவுண்ட் சுவர் களில் ” சிவனே மெய்யான தெய்வம்” “சிவன் அழைக்கிறார்” ஓம் சக்தி பராசக்தி என்று எங்காவது எழுதியதுண்டா? அவ்வாறு எழுதவந்தால், அதை கிறிஸ்தவர்கள் அனுமதித்த வரலாறு தமிழகத்தில் ஏதாவது ஓரிடத்தில் உண்டா? இந்துக்களே யோசனை செய்யுங்கள்… என்றார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img