மாமியாரை குத்திய மருமகன் கைது !

சற்றுமுன்
 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமியாரை கண்ணாடியால் குத்திய மருமகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி ராணி(45). இவரது மகள் நித்யா(24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான வாழ்ராஜா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் நித்யா, வாழ்ராஜாவை பிரிந்து ஓராண்டாக தாய் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 28-02-2016 அன்று அங்கு வந்த வாழ்ராஜாவுக்கும், ராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த வாழ்ராஜா ஜன்னலை உடைத்து கண்ணாடியால் ராணியைக் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த ராணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக ராணி அளித்த புகாரின்பேரில் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து வாழ்ராஜாவை கைதுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.