தமிழகத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல்: தேதியை அறிவித்தது ஆணையம்

சற்றுமுன்

புதுதில்லி:

தமிழகம், கேரளா, புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 
அதன்படி,
தமிழகத்துக்கு ஒரு கட்டமாக தேர்தல்

வேட்பு மனு தாக்கல்: 22-4-16

வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள்:29-4-16

வேட்பு மனு பரிசீலனை:30-4-16

வேட்பு மனுக்களை திரும்ப பெற இறுதி நாள்:2-5-16

தேர்தல் நாள்: 16-5-16

வாக்கு எண்ணிக்கை 19-5-16

தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களில் நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் தமிழகத்தில் மே 22ம் தேதியுடனும், அசாமில் ஜூன் 5ம் தேதியுடனும், கேரளாவில் மே 31ம் தேதியுடனும், புதுச்சேரியில் ஜூன் 02ம் தேதியுடனும், மேற்குவங்கத்தில் மே 29ம் தேதியுடனும் நிறைவடைகிறது. இந்த மாநிலங்களில் தமிழக சட்டசபையின் பதவி காலமே முதலில் முடிவடைகிறது. இதனால் மே 22ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்து, முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக தமிழகத்தை அடிப்படையாக வைத்தே தேர்தல் கமிஷன் தேர்தல் தேதி அட்டவணையை வகுத்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.